Friday, November 19, 2010

தள்ளாடும் தேசத்தில்....!

உலக அளவில் அறிவுசார் திறனின் இந்தியப் பங்களிப்பு 17.5%. அரசின் பல்வேறு குழு அறிக்கைகளின்படி 77% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். வறுமைக்கோட்டின் அளவீடு எதுவெனில் தினம்ரூபாய் 16 கூட ஈட்ட முடியாதவர்கள், பட்டினியோடு தங்கள் நாட்களை நகர்த்துகிறவர்கள், மெல்லச் சாகின்றவர்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அத்வானி சொன்னார்..."சுவிஸ் வங்கியில் உள்ள 75 இலட்சம் கோடி இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்ப்படும்!".
உடனே சிவகங்கை சீமான் சிதம்பரம் "ஆமாம், தாங்களும் மீட்போம்" என்றார்.உச்ச நீதிமன்ற பொதுநலன் வழக்குகளும், தொடர் நடவடிக்கைகளும் எல்லாக்கட்சிகளும் 'பாலுக்கு இந்தத் திருட்டுப்பூனைகளா காவல்...?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.

இன்றையக் கணக்குப்படி இந்தத் திருட்டர்களின் சுவிஸ் வங்கி இருப்பு 108 இலட்சம் கோடி.உலக வங்கியிடம் 5,68,000 கோடி கடன் வாங்கியாயிற்று. அதற்கு வருடத்திற்கு 1,39,800 கோடி வட்டி கட்ட வேண்டும். உலக வங்கி போண்டியாகாமல் காக்க புதிதாக 10,000கோடி கடனும் புதுச் சுமையாயிற்று.
உலக வங்கியின் சீடப்பிள்ளைகள் மன்மோகன் சிங்கும், திட்டக்குழு தலைவர் அலுவாலியாவும் தேசத்தை மொத்தமாக அடமானம் வைத்து விட்டார்கள். யாராவது இனி எங்காவது நடப்பது காங்கிரஸ் ஆட்சி என்றால் நம்பாதீர்கள்.

உலக வங்கி சொல்கிறபடி ஆட்சி நடக்கிறது வேண்டுமானால் இந்திய பங்குச் சந்தையை தன் கை விரல் அசைப்பில் ஆட்டுவிக்கிற அம்பானி சகோதரர்களின் சிறிதளவு இசைக்குக் காங்கிரஸ் பெரும் நாட்டியமாடும். இது தான் காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவு பீடங்கள்.விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்களின் மான்சாண்டோ, கார்கில் வசம் ஒப்படைக்க திரை மறைவு சதி நடக்கிறது. இதற்கான ஒப்பந்த்தில் கையெழுத்திட மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றது தலைக்குனிவே..மன்மோகன் சிங் உலக வங்கியின் உன்மை ஊளியன்.தேசத்தைச் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் எனக் கூறு போட்டுக் கொடுத்தோம். அங்கு இந்திய அரசின் சட்டங்கள் செல்லாத சலுகை பூமிகள் அது. வரி, உள்கட்டமைப்பு,மின்சாரம்,தொழிலாளர் நலன என்பதில் பல நீக்குப் போக்குகள். தேசத்தில் மக்களின் வாழ்வாதார பணிப் பாதுகாப்பு இல்லை. தேசத்தில் 44கோடி பேர் பணிபுரிந்தாலும் அதில் 9% பேருக்கே பணி உத்திரவாதம்,ஊதியம்,இன்னபிற பாதுகாப்பு. மீதிப்பேர் அமைப்புச் சாரா தொழில்களில் வாழ்வுரிமை இழந்து வாடுகிறார்கள். கண்ணீரோடு நாட்களை நகர்த்துகிறார்கள்.

இந்திய அரசின் உளவு நிறுவனங்கள் தெரிவிக்கிறது: ' 220 மாவட்டங்களில், 20 மாநிலங்களில் 40% நில்பபரப்பில் 92,000 சதுர கிலோ மீட்டர் பகுதியில் 20,000 மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் 50,000 ஆதரவாளர்களுடன் சிவப்பு தனி மண்டலமாகி(Red-corridor) தேசத்தின் பெருந்தலைவலியாக உருவாகி வருகிறது.
உள்நாட்டு நிலவரம் இதுவெனில் சுற்றியுள்ள பாகிஸ்தான்,காஷ்மீர் கேட்கிறது. சீனா அருணாச்சலப் பிரதேசத்தைக் கேட்கிறது. இலங்கையும் தொடர்ந்து இந்தியாவின் இளிச்சவாய்த் தனத்தை பார்தது அந்தமான் தீவுகள் எங்களுக்குச் சொந்தம் என சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது..புது தில்லியில் அந்த கொடுங்கோலன் இராஐக்ஷேக்கும் இங்கே சிவப்புக் கம்பள வரவேற்பு..என்னடா இது பெருங்கேவலம்..!

பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்கப்படுகின்றன. மக்களின்வைப்பு நிதி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகின்றன. எண்ணெய் வளம் அம்பாணி குடும்பத்தாருக்கு வாரி வழங்கப்பட்டுவிட்டன. ஆண்டிற்கு 5 இலட்சம் கோடி தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு வழங்கியுள்ளது தவிர இனி அவர்களே 15 நாட்களுக்கு ஒரமுறை விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என முடிவெடுத்து கொள்ளையடிக்க விட்டார்கள். டீசல் விலையேற்றம் மட்டும் தப்பி நிற்பது பெரும் ஆறுதல்.விலைவாசி உயர்ந்துவிட்டது. அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை நடுத்தர மக்களின் வாங்கும் சக்தியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது..!150 பொருட்கள் ஆன்லைன் வர்த்தகத்தால் யூக பேரச் சூழலில் சிக்கி உயர பறக்கிறது. விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்காமல் தற்கொலைக்கு ஓடுகிறார்கள்.


சுதந்திர இந்தியா எதிர்கொள்ளும் எல்லா சவால்களையும், பிரச்சனைகளையும் தாங்கும் சக்தி யாரிடம் உள்ளது?

நம் சுதந்திரத்தை மீட்டேடுக்க முடியுமா? இந்திய மக்கள் தொகையில் பாதியாக உள்ள இளைஞர்கள் நம் கையில் தேசம் உள்ளது. டாக்டர்.அப்துல்கலாம் கண்ட கனவும் அதுவே....! இந்திய இளைஞர்கள் பாரம்பரிய தொழிலான விவசாயத்தை மீட்டெடுத்து, தம் அறிவுசார் திறனை மேலும் வளர்த்தெடுத்து(இக்கட்டுரையின் முதல் வரியைப் படிக்கவும்) சுய சார்புள்ள, தற்சார்புள்ள தேசத்தை உருவாக்குவோம்....! --ஜோசப் ராபின்சன்

தமிழ்க் கலைச்சொல் அறிக!

 *Genes= மரபணு *Organism= உயிரி/ உயிரினம் *Chromosome= நிறமி *X-Chromosome = எக்சு நிறமி *Y-Chromosome= ஒய் நிறமி *Twisted Helix= திருகு சுழ...