Tuesday, September 1, 2020

தமிழ்க் கலைச்சொல் அறிக!

 *Genes= மரபணு

*Organism= உயிரி/ உயிரினம்

*Chromosome= நிறமி

*X-Chromosome = எக்சு நிறமி

*Y-Chromosome= ஒய் நிறமி

*Twisted Helix= திருகு சுழல்

*Molecule= மூலக்கூறு

*Nucleic Acid= கருக் காடி

*DNA= தாயனை (அனடி)

*RNA= ஆறனை (அனரி)


Monday, August 31, 2020

~'நெகட்டிவ்' ரத்த க்ரூப் கொண்ட பெண் 'பாசிட்டிவ்' ரத்த க்ரூப் கொண்ட ஆணை திருமணம் செய்து கொள்ளலாமா ???


~'நெகட்டிவ்' ரத்த க்ரூப் கொண்ட பெண் 'பாசிட்டிவ்' ரத்த க்ரூப் கொண்ட ஆணை திருமணம் செய்து கொள்ளலாமா ???

தோஷம் என்று கூறப்படுவதன் பின்னணி என்ன ??

இதைப்பத்தி நான் ஏன் எழுதுறேன் ன்னா, திருமணத்திற்கு முன்பு செய்யும் ரத்தப் பரிசோதனையில், பெண்ணுக்கு நெகட்டிவ் ரத்த வகை இருந்தா, உண்மை என்னன்னே கண்டுபுடிக்காம வரன் தட்டிக் கழிக்கும் நிலைமை கொஞ்ச நாளாவே நம்ம சமுதாயத்துல இருக்கு.

பெண்ணுக்கும் பையனுக்கும் ஜாதக பொருத்தம் பாக்கப் போற இடத்துல, ரத்த க்ரூப் ரெண்டு பேருக்கும் வேற வேற... பொண்ணுக்கு O -ve ரத்தம் இருக்கு.பையனுக்கு O +ve.

அதனால கல்யாணம் பண்ணி வெச்சா, பிறக்கப்போகிற குழந்தைக்கு ஆபத்து ன்னு கல்யாணம் தட்டிக்கழிக்குப் படும் சூழல்களை கேள்விப்பட்டதால் தான் உண்மை நிலையை தெரியப்படுத்த இந்த பதிவு.

சரி டாக்டர்... அப்போ உண்மை என்ன தான் சொல்லுங்க ??

அதாவது சார்.... நம்ம ரத்த வகை 

A,B,AB,O -ன்னு நாலு பெருவகையா இருக்கு.

இதுல Rh Factor ன்னு ஒன்னு இருக்கு.... D- Antigen ன்னு சொல்லுவோம். இது இருந்தா அந்த நபர் பாசிட்டிவ், இல்லைன்னா நெகட்டிவ்.

"O Positive" ன்னா , D Antigen(Rh +ve) இருக்கு.

"O Negative" ன்னா , D Antigen(Rh -ve) இல்லை.

Rh பாசிட்டிவாக இருந்தாலும் சரி, நெகட்டிவாக இருந்தாலும் சரி. உடல் நலம் அதனால் எந்த மாறுதலும் அடையாது.

இப்போ, உதாரணமா

'O நெகட்டிவ்' பெண் 'O பாசிட்டிவ்' ரத்த வகை கொண்ட ஆணை கல்யாணம் செய்றாங்க ன்னு வெச்சிக்குவோம்.

பிறக்கும் குழந்தை பாசிட்டிவ் ஆகவும் பிறக்கலாம்; நெகட்டிவ் ஆகவும் பிறக்கலாம். அதாவது D antigen இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்.

இப்போ, குழந்தை நெகட்டிவ் (O -ve) ஆக பிறக்கும் பட்சத்தில் பிரச்சனையே இல்ல.ஆனால், பாசிட்டிவாக ( O +ve )ஆக குழந்தை பிறக்கும் பட்சத்தில் தான் ஒரு சிக்கல்.

முதல்ல ANTIGEN ன்னா என்ன?? ANTIBODY ன்னா என்ன?? ன்னு சொல்லிடறேன்.

வெரி சிம்பிள்.

உங்களை யாரோ ஒருவர் அடிக்க கை ஓங்குகிறார் ன்னு வெச்சிக்குவோம்... நம்மை தாக்கும் ஒரு "அந்நிய சக்தி" தான் ANTIGEN.நம்மை பாதுகாத்துக் கொள்ள நமது கைகளை வெச்சு தடுப்போம் ல, நமது "தடுப்புச்சுவர்" தான் ANTIBODY.இப்போ, Rh நெகட்டிவ் ( O -ve) பெண்மணி, Rh பாசிட்டிவ் (O+ve) ஆணுடன் கூடி உருவாகும் குழந்தை O +Ve வாக இருந்தால் என்ன ஆகும் ன்னு பாப்போம் !! அம்மாவிற்கும் குழந்தைக்குமான பாலம் தான் இந்த நஞ்சுக்கொடி/தொப்புள்கொடி. குழந்தை பிறப்பின் பொழுது அல்லது கருச்சிதைவு (ABORTION) அப்போ என்ன ஆகும் ன்னா, குழந்தையோட ரத்தத்தில் உள்ள Rh +ve Antigen தொப்புள்கொடி வழியா Rh -ve Antigen கொண்ட அம்மாவின் உடலிற்கு சென்றடையும். 

இப்போ, இங்க நான் சொன்ன 'Antigen' --> குழந்தையின் Rh +ve ரத்தம். என்னடா இது, நம்மள அடிக்க எவனோ வரானே ன்னு , அம்மா உடம்பில் உள்ள நோய்எதிர்ப்பு சக்தி, கை ஓங்கும் குழந்தையின் Rh +ve Antigen க்கு எதிராக, தன் இரும்புக்கரம் கொண்டு ஒரு Antibody யை உருவாக்கும். இதற்குப் பெயர் 'Anti Rh Antibody' (அதாவது Rh Antigen க்கு எதிராக உண்டாகும் Antibody). இப்போ, அம்மாவின் உடலில் உருவான Anti Rh Antibody தொப்புள்கொடி மூலம் குழந்தையின் ரத்தத்தில் உள்ள Rh +ve Antigen க்கு சென்று அங்கு தாக்குதல் நடத்தும். அதனால, குழந்தையின் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் சிதையும். இதனால் "Erythroblastosis Fetalis" எனப்படும் ரத்த சிதைவு ஏற்பட்டு குழந்தைக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படும். 

அப்போ, நெகட்டிவ் ரத்த வகையறா கொண்ட ஒரு பெண் , பாசிட்டிவ் வகையறா கொண்ட ஆணை திருமணம் செய்யவே கூடாதா டாக்டர் ??

100 சதவிகிதம் செய்யலாம்.

எப்டி டாக்டர்.

இதுக்கு தான் சார் Routine - Ante Natal Anti D Prophylaxis ன்னு கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன் மூலம், Rh நெகட்டிவ் பெண்மணிகள் கண்டறியப்பட்டு , அவர்களுக்கு 28-ம் வாரம் மற்றும் 34 ஆம் வாரங்களில் ANTI-D ஊசி போடப்படுகிறது. இதன் மூலம், பிறக்கும் குழந்தைக்கு தாயின் உடலில் உருவாகும் Anti Rh Antibody கள் குழந்தையின் சிவப்பு அணுக்களை தாக்கும் திறன் முற்றிலும் தவிடுபொடியாக்கப் படுகிறது. மேலும், பிறந்த குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்து, குழந்தை Rh +ve ஆக இருப்பின், 72 மணி நேரத்தில் இன்னொரு Anti D ஊசி போடப்படுகிறது. குழந்தை Rh -ve ஆக இருப்பின், அந்த ஊசி தேவையில்லை.

இந்த தாக்குதல் முறைக்கு "Rh Isoimmunization" என்ற பெயர் உண்டு... பெரும்பாலான சமயங்களில், முதல் குழந்தை இந்த தாக்குதலுக்கு உட்படாது. இரண்டாம் குழந்தையை பாதிக்கும் வாய்ப்புகளே மிக அதிகம்.

நம்மோட முடிவுரை என்னன்னா,

Rh +ve ரத்தம் கொண்ட ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதால், பிறக்கும் குழந்தை Rh +ve என்பதால் எந்த சிக்கலும் இல்லை. Rh -ve ரத்தம் கொண்ட ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதால், பிறக்கும் குழந்தை Rh -ve என்பதால் எந்த சிக்கலும் இல்லை. Rh +ve ரத்தம் கொண்ட ஆணும், Rh -ve பெண்ணும் திருமணம் செய்வதால், பிறக்கும் குழந்தை Rh +ve அல்லது Rh -ve ஆக பிறக்கலாம்... Rh -ve ஆக இருந்தால் எந்த சிக்கலும் இல்லை.

Rh +ve ஆக இருக்கும் பொருட்டு Anti D ஊசி போட்டுக்கொண்டால், தாய் சேய் இருவரும் 100 % ஆரோக்கியத்துடன் இருப்பர். எனவே, திருமணம் செய்ய ரத்தவகை தடையில்லை. ஜாதகம் என்னும் மூடநம்பிக்கையை பொருட்படுத்த வேண்டாம்.

எவ்வண்ணமாயினும் காதல் அழகே !!

நன்றி.❣️🙌

Dr.அரவிந்த ராஜ்.


#BETTER_HEALTH_FOR_BETTER_LIFE



Saturday, April 11, 2020

கொரோனா வைரஸ் பிறபொருளெதிரி- ஒரு பார்வை (Corona Virus Antibody-A glance)

கொரோனா வைரஸ் 

நமது உடம்பில் புதிதாக நுழையும் எந்த ஒரு கிருமியும் Antigen என்று சொல்லப்படும்

இந்த கிருமியை அழிப்பதற்காக இரத்த வெள்ளை அணுக்கள் உருவாக்கும் பொருள் எதிர்ப்பு சக்தி Antibody எனப்படும்.
இந்த Antibody இரண்டு வகைப்படும்.

முதலாவது Ig M - இது கிருமி உள் நுழைந்த உடனடியாக உருவாவது. கிருமிகள் இருக்கும் வரை இது போராடும். எனவே இது இருந்தால் கிருமிகள் Active ஆக இருக்கும் என்று எடுத்துக் கொள்ளப்படும்.

இரண்டாவது Ig G இது கிருமிகள் முற்றிலும் அழியும் முன்பு உருவாகும். ஆனால் நமது உடலில் காலத்திற்கும் இருக்கும இந்த வைரஸ் திரும்ப வரும் போது இந்த IgG நினைவு வைத்து அழிக்கும் இயல்பு உடையது. இது பாசிடிவ் என்று வருபவர்கள் இந்த கிருமி பாதிப்பு மீண்டு விட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

1)RT PcR கொரோனா வைரஸ் மாதிரிகள் உடலில் இருக்கிறதா என்று கண்டு பிடிப்பது

2)IgM கொரோனா வைரஸ் Antibody 

3)IgG கொரோனா வைரஸ் Antibody

இது ஒன்று ஒன்றும் என்றைக்கு பாசிடிவ் வரும் என்று இந்தப் படம் தெரிவிக்கிறது.


ஐந்து முதல் 14 நாட்கள்

இதில் IgM Antibody உருவாக ஆரம்பிக்கும். இது உச்சநிலையை அடையும் ஏழு முதல் பத்து நாட்கள், வைரஸ் கிருமிகள் அழிய ஆரம்பித்து இருக்கும். அது அழியும் போது இதுவும் இறங்க ஆரம்பித்து விடும்

இந்த நிலையில் RT PcR plus IgM இரண்டும் பாசிடிவ் ஆக இருக்கும்

15 நாட்கள் முதல் IgG உருவாக ஆரம்பிக்கும்.  இது நன்றாக உருவான பிறகு வைரஸ் கிருமிகள் முற்றிலும் அழிந்து விடும். வைரஸ் கிருமிகள் எல்லாம் அழிந்த பிறகு இது மட்டும் தான் இரத்தத்தில் இருக்கும்.

எனவே காய்ச்சல் வந்து ஏழு நாட்கள் கழித்து டெஸ்ட் பண்ண போகும் போது இது  பாசிடிவ் ஆகும்

இந்த பரிசோதனை செய்வது மிகவும் எளிதானது. நோயாளிகள் இரத்தம் எடுத்து நாம் சர்க்கரை அளவு பார்ப்பது போல, கர்ப்பம் ஆகி இருப்பது பார்ப்பது போல கார்ட்டில் வைத்தால் வரும் கோடுகள் வைத்து இது கொரோனா பாசிடிவ்வா, நெகட்டிவ்வா என்று எளிதாக கண்டறியலாம். 30 நிமிடங்களில் முடிவுகள் தெரியும்

வீட்டில் காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு இந்த டெஸ்ட் செய்யப்படும்.
நெகட்டிவ் என்றாலும் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் டெஸ்ட் செய்யப்படும்
பாசிடிவ் என்றால் மருத்துவ மனையில் அட்மிஷன் போடப்பட்டு அவர்களைச் சார்ந்தவர்கள் பரிசோதனை செய்யப்படுவார்கள்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) விரைவான ஆன்டிபாடி நெறிமுறையின் ஆலோசனை பயன்பாடு கீழே கொடுக்கப்பட்டுள்ள்ளது.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் கொரோனா ரேப்பிட் கிட் 



தமிழ்க் கலைச்சொல் அறிக!

 *Genes= மரபணு *Organism= உயிரி/ உயிரினம் *Chromosome= நிறமி *X-Chromosome = எக்சு நிறமி *Y-Chromosome= ஒய் நிறமி *Twisted Helix= திருகு சுழ...