Tuesday, September 6, 2011

நட்பு


கடற்கரையின்

முகம் தெரியாத இரவில்

பேசிக் கொண்டிருந்த நம்மை

நண்பர்களாகவே

உணரும் பாக்கியம்

எத்தனைக் கண்களுக்கு

வாய்த்திருக்கும்....



கனவில் கூட

என்னைக்

கிள்ளிப் பார்க்கும்

இந்தச் சுரப்பிகள்

உன்னைக்

கண்டதும் எப்படி

இவ்வளவு

இயல்பாய்

தூங்கிவிடுகின்றன.....




தேர்வு முடிந்த

கடைசி நாளில் நினைவேட்டில்

கையொப்பம் வாங்குகிற

எவருக்கும் தெரிவதில்லை

அது ஒரு நட்பு முறிவிற்கான

சம்மத உடன்படிக்கைஎன்று.....




தூங்கு என்று மனசு சொன்னதும்

உடம்பும் தூங்கிவிடுகிற

சுகம்

நட்புக்குத்தானே வாய்த்திருக்கிறது...




காமத்தாலான

பிரபஞ்சத்தில்

நட்பைச்

சுவாசித்தல்

அவ்வளவு

எளிதன்று...

2 comments:

Anonymous said...

nice

Anonymous said...

nice...ya..!

தமிழ்க் கலைச்சொல் அறிக!

 *Genes= மரபணு *Organism= உயிரி/ உயிரினம் *Chromosome= நிறமி *X-Chromosome = எக்சு நிறமி *Y-Chromosome= ஒய் நிறமி *Twisted Helix= திருகு சுழ...