Tuesday, September 6, 2011

நேர்மை-வெற்றி

சம்பாதிப்பது மட்டும் வெற்றி பெறுதல் என்று நினைத்துவிட வேண்டாம். கள்ளச் சாராயம் கய்ச்சுகிரவன்கூடக் காசு வைத்திருக்கிறான். வேசிகள் கூட . சி. யில் இருக்கிறார்கள். பணத்துக்கு அப்பாலும் வெற்றி கணக்கிடப்படும்.


நேர்மை, சுயமரியாதை, கெளரவம் இவையெல்லாம் கூட வெற்றி - தோல்வியின் நிர்ணயப் புள்ளிகள். அதற்காக நேர்மையாக இருக்கிறவன் ஏழ்மையில் இருக்க வேண்டும் என்கிற அர்த்தமற்ற வெற்றி ஒரு வெற்றியே அல்ல.

பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பின் அவர் மனைவி ரேஷன் கடையில் இரண்டு பைகளில் கோதுமை வங்கிக்கொண்டு தூக்க முடியாமல், நடக்க முடியாமல் சிரமப்பட்டார்..... " ஆஹா என்ன நேர்மை என்று செய்தி படித்த பொது நான் மகிழவில்லை. ஒரு நேர்மையான மனிதனுக்கு எவ்வளவு கீழான இடத்தை இந்த இந்தியச் சமூகம் கொடுக்கிறது என்று சமூகத்தின் மீது எனக்கு கோபம் வருகிறது.

ஏழ்மையிலும் நேர்மை என்பது பாராட்டுக்குரியது. ஆனால் நேர்மைக்குப் பரிசே ஏழ்மை என்றால் சமூகம் தவறான பாதையில் போகிறது என்று பொருள். அதை நாம் மாற்றியே தீரவேண்டும்.

No comments:

தமிழ்க் கலைச்சொல் அறிக!

 *Genes= மரபணு *Organism= உயிரி/ உயிரினம் *Chromosome= நிறமி *X-Chromosome = எக்சு நிறமி *Y-Chromosome= ஒய் நிறமி *Twisted Helix= திருகு சுழ...